Tamilnadu
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த தாய் கைது : அழுது புலம்பும் சிறுமி! (வீடியோ)
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, உயர்மின் கோபுரங்கள அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது நல்வாழ்வுக்காகப் போராடும் மக்களை அரசும், காவல்துறையும் அடக்குமுறையைப் பயன்படுத்தி ஒடுக்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் போலீசாரால் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில், உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய தனது தாயை கைது செய்த போலீசாரிடம் சிறுமி ஒருவர் அழுது புலம்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
"மக்களுக்கு உதவ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்" - ஒன்றிய அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம் !
-
நடிகை விஜயலட்சுமி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்!
-
SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்; வெல்லும் : அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
-
“காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” : சனாதன திமிருதனத்தை வெளிக்காட்டிய வழக்கறிஞர் ராகேஷ்!