Tamilnadu
வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வட தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை, 28-37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
மேலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தென் தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருவதால், வட தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
2 பவுன் சங்கிலி பறிப்பு.. காவல் நிலையம் முன்பே நடந்த சம்பவம்.. தவெக நிர்வாகி செயலை கண்டுகொள்ளாத போலீஸ்!
-
மிரட்டிய அர்ஜெண்டினா.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய மெஸ்ஸி.. இங்கிலாந்துக்கு நடந்த அதிர்ச்சி!
-
ஒரு மாத தவணை கட்ட தாமதம்.. வீடு புகுந்த வங்கி ஊழியர்கள்.. வீடியோ வெளியிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!
-
நாகர்கோவில் காவல் நிலைய மரணம் : மறைக்க முயற்சி செய்த த.வெ.க. அரசு - முரசொலி விமர்சனம்!
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!