Tamilnadu
மெர்சல் பட பாணியில் கமிஷன் வேலை பார்த்த டிரைவர்... சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...
ஈரோடு மாவட்டம் கிராமடை பகுதியைச் சேர்ந்த ரித்திகா (14) சிறுமிக்கு சாலை விபத்தின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியில் காலில் பிளேட் வைப்பதற்கு பதில் கம்பியை வைத்து சிகிச்சை மேற்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 20ம் தேதி, இனியன் என்பவர் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஈரோடு தீயணைப்பு நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில், இனியனின் மகள் ரித்திகாவின் காலில் பலத்த அடிபட்டது.
இதனால், மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்த போது, தனியார் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. மருத்துவமனையில் சிறுமியை சோதனை செய்து பார்த்ததில், அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையெனில், உங்களின் மகளின் எதிர்காலம் நிர்மூலமாகிவிடும் என இனியனிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருளாதார பிரச்னை என்று தயங்கினால், காப்பீடு உள்ள உங்கள் உறவினர்களின் வாகனம் மோதியதாக சொல்லி எங்களது வழக்கறிஞர் மூலம் பணத்திற்கு ஏற்பாடு செய்துக்கொள்ளலாம் எனவும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த இனியன் மகளின் நலனுக்காக தவணை முறையில் சிகிச்சைக்கு ஆகும் ரூ.75 ஆயிரத்தை செலுத்தியிருக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், சிறுமி ரித்திகாவுக்கு கால் வலி அதிகரித்திருந்ததால், அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அதில், சிறுமியின் காலில் கம்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேள்வி கேட்டபோது, அது மோல்டிங் ப்ளேட் என சாக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து, வேறு மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில், ஒழுங்கான சிகிச்சை மேற்கொள்ளாததால் சிறுமியின் கால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். பின்னர் கடுங்கோவத்துக்கு ஆளான பெற்றோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேசிய சிறுமியின் தாயார், நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு போகச் சொன்னோம். ஆனால், அவரோ இந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார் என குற்றஞ்சாட்டினார். மேலும், அந்த மருத்துவமனையில் அவசர உதவி மற்றும், அவசர கால சிகிச்சைக்கு என எந்த முறையான வசதியும் இல்லை என்றும் சாடினார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!