Tamilnadu

தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் கல்வி கட்டணத்தை வெளியிடவேண்டும்: பள்ளி கல்வித்துறை!

தமிழகத்தில் விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிச்சாரம் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தனியார் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில தனியார் பணிகள் அதிநவீன வசதி உள்ளது என அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரினை அடுத்து தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடன் வசூலிக்கும் கட்டண விபரத்தை பள்ளி நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பள்ளிகல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவாயிலில் கட்டண விபரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.

மேலும், கல்விக் கட்டண நிர்ணயக்குழு பரிந்துரை அடிப்படையில் கட்டணங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை பெற்றோர்கள் வரவேற்று உள்ளனர். ஆனாலும் இந்த நடவடிக்கை போதாது, சில பள்ளிகள் முறையாக வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டும்தான் அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ளார்களா? என ஆய்வை அதிகாரிகள் அடிக்கடி நடத்தவேண்டும் என பல பெற்றோர்கள் வலியறுத்தியுள்ளனர்.