Tamilnadu
பொய்ச் செய்தி வெளியிட்ட ‘விகடன்’ மீது ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் வழக்கு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பொய்ச்செய்தி வெளியிட்ட ஆனந்த விகடன் குழுமத்தின் மீது 1 கோடியே 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கோரி சிவில் தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறாக பொய்ச் செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்திடம் நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில், மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில், பொய்ச் செய்தியை வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பி.சீனிவாசன், இயக்குநர்களான திருமதி ராதிகா சீனிவாசன், திரு. குமார் மன்னோர் வெங்கடேஸ்வரா, ஆனந்தவிகடன் பதிப்பகத்தின் ஆசிரியர் திரு.எஸ்.அறிவழகன் மற்றும் ஜுனியர் விகடன் இதழின் செய்தி ஆசிரியர் திரு. பாலகிஷன் ஆகியோருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் வில்சன் அசோசியேட்ஸின் வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன், நஷ்டஈடு கோரி “வக்கீல் நோட்டீஸ்” அனுப்பினார்.
இதுகுறித்து விகடன் தரப்பு எவ்வித பதிலும், விளகமும் அளிக்காத காரணத்தால் ‘ஆனந்த விகடன்’ குழு அச்சகத்தார், வெளியீட்டாளர் மற்றும் ஜூனியர் விகடன் இதழ் ஆசிரியர் என 8 பேர் மீது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 கோடியே 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கோரி சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!