Tamilnadu

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த 6 அரசுப் பள்ளிகள் மூடல் : பெற்றோர் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர் போன்ற ஏழை எளிய மக்கள் வாழும் பகுதி மாவட்டம் ஆகும். இங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி அவர்களின் குழந்தைகள் படிக்க ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் உதகை அடுத்த தங்காடு , கெத்தை , டி.ஒரநள்ளி ,காந்திபுரம் ,பெருபன்னை உட்பட 6 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருவதால் முன்னறிவிப்பின்றி கல்வித்துறை 6 பள்ளிகளை மூடியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 13 பள்ளிகளை மூட நீலகிரி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராமப் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது