Tamilnadu

ஒருபுறம் வெயில்; மறுபுறம் கனமழை என கலவையான வானிலையில் தமிழகம் : சென்னை வானிலை மையம் தகவல்!

உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரை 28-39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களான கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.