Tamilnadu
12-ம் வகுப்பு பாடத்தில் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள்!
இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த பாதுகாத்து வந்த நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
12-ம் வகுப்புக்கான தாவரவியல் பாடத்தில் விவசாய ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய பயிர் வகைகளை மீட்டெடுத்தல், பிரிவில் முன்னோடியான நெல் ஜெயராமனின் சாதனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் நார்மன் இ போலக், சுவாமிநாதன் ஆகியோரின் பணிகளும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் புற்றுநோயால் காலமான நெல் ஜெயராமன், 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மிட்டெடுத்தவர். அவரைப் பற்றி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாவது “ திருவாரூர் மாவட்டம் அதிரங்கத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், சீடர். ’நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அரும்பாடுபட்டவர். 2006-ம் ஆண்டு முதல் நெல் ரகங்களை மீட்டு தனது, பண்ணையில் விதை திருவிழாவை நடத்தியவர். சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதை பெற்றவர். 2015-ம் ஆண்டுக்கான சிறந்த மரபணு காப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றவர். ” என்று பெருமைபடுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!