Tamilnadu
மே 28ல் காவிரி ஆணையக் கூட்டம் கூடுகிறது!
ஜூன் மாதம் முதல் காவிரியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் மே 28ம் தேதி காவிரி ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு, மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி ஒழுங்கு முறை குழு டெல்லியில் கூடுகிறது.
இந்த ஒழுங்குமுறை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நீர் திறப்பது குறித்து மே 28ல் நடைபெறும் காவிரி ஆணையர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீரை பெற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!