Tamilnadu
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புக்காக சென்னையில் 10,000 போலீசார் குவிப்பு!
தமிழகத்தின் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களான ராணி மேரி கல்லூரி (வட சென்னை தொகுதி), அண்ணா பல்கலை (தென் சென்னை தொகுதி), லயோலா கல்லூரி (மத்திய சென்னை தொகுதி) ஆகிய பகுதிகளில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன் தெரிவித்ததாவது,
சென்னையில் உள்ள மூன்று வாக்குப்பதிவு மையங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9 காவல்துறை துணை ஆணையர்கள் தலைமையில் 35 உதவி ஆணையர்கள், 91 ஆய்வாளர்கள், 300 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை காப்பதற்காகவும் சென்னை பெருநகர் முழுவதும் 7,000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே வாக்கு எண்ணிக்கை பணிக்காக நாளை சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!
-
“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!
-
இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 61 அதிநவீன புதிய பேருந்துகள்... சிறப்பம்சங்கள் என்ன? - விவரம்!
-
“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!