Tamilnadu
வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திற்கும் மே 19ம் தேதியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
இந்த நிலையில் மே 23ம் தேதியான நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடந்த 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மே 23 அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நள்ளிரவு 12 மணிவரை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!