Tamilnadu

மதுராந்தகம் ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை !

காஞ்சிபுரம் மாவட்டம் என்றால் ஏரிகள் நிறைந்த மாவட்டம் மாவட்டம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன மாவட்டத்தில் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி இருந்து வருகின்றனர். 2400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி தற்போது தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடக்கின்றது. மதுராந்தகம் ஏரியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தூர் வாரப்பட்டது அதன் பின் தூர் வாரப்படவில்லை

60 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் ஏரி தண்ணீர் விவசாயத்திற்க்கும், குடிநீர்காகவும் பயன்படுத்தினர் ஆனால் தற்போது விவசாயத்திற்க்கு மட்டுமே பயன்படுத்ததி வருகின்றனர்.

மதுராந்தகம் ஏரியில் கடைசியாக 2017 ஆண்டு நிறம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கின்றது

எனவே 60 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மதுராந்தகம் ஏரியை தூர் வாரி விவசாயத்திற்க்கும் குடிநீர்க்கும் பயன்படுத்தி வேண்டும், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரிக்க வேண்டும், ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என மதுராந்தகம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.