Tamilnadu
தென் தமிழகத்தில் மழையும்... வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்... வானிலை தகவல் !
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !