Tamilnadu
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்!
தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்னிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி பணியில் இருந்துள்ளார். அவருக்கு தீடீரென நெஞ்சுசலி ஏற்பட்டுள்ளது. சம்ப இடத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை பாவனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வாட்டரத்தில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!