Tamilnadu

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும்-பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் தகவல்!

இந்தியா முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை நிறுவனங்கள் மூலம்தான் 90 சதவிகித பெட்ரோல் பங்க்குகள் பெட்ரோல், டீசலைப் பெறுகின்றன.

பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கவில்லை என்றால், 'மே 14-ம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் மே 14-ம் தேதிக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.