Tamilnadu
மே 27 வரை தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் : சத்ய பிரதா சாஹூ
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்.,18ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, மே 19ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் அன்றைய தினமே நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி அன்று எண்ணப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை வரை மட்டுமல்லாமல் மே 27ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Also Read
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?
-
”பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கரைபுரண்டோடும் ஊழல்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
-
இந்தியா மீதான 50% வரி விதிப்பு அமலுக்கு வந்தது! : அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்!
-
”உண்மையான மக்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புகழாரம்!
-
முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!