Tamilnadu
அரசுக் குடியிருப்பில் இருந்து வெளியேறிய நல்லக்கண்ணு: அரசு செயலுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்!
சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 94 வயதான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார். சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் ஆர்.நல்லக்கண்ணுவும் வெளியேறினார்.
அங்கிருந்து வெளியேறிய அவர் கே.கே நகரில் குடிபெயர்ந்துள்ளார். ஆர்.நல்லக்கண்ணுவுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.
94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!