Tamilnadu
மின்தடை ஏற்படாமல் இருந்தாலும் 5 பேரும் உயிரிழந்திருப்பார்கள்: டீன் வனிதா மழுப்பல் பதில்!
மே 7ம் தேதி அன்று மதுரையில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக அன்று மாலை 6.30 - 8.30 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட வெண்டிலேட்டர் செயலிழந்ததால், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயர் நீதிமன்றமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து புகார் தொடர்ந்ததில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மின்சாரம் தடை ஏற்படாமல் இருந்திருந்தாலும் நோயாளிகள் ஐவரும் உயிரிழந்திருப்பார்கள் என அலட்சியமாகவும், மழுப்பலாகவும் பதிலளித்துள்ளார்.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!