Tamilnadu
7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் !
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கில், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பேரறிவாளன் பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன், அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!