Tamilnadu
சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய உள்ளதால் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வராமல் இருப்பது காண முடிகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மணிக்கு 30-40கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 30-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இயல்பை விட 5-6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !