Tamilnadu
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில்! #Alert
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே சென்று 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும்.
அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதால், கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!