Tamilnadu
சென்னையில் இன்று வெயிலுக்கு லீவ்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வட கிழக்கே உள்ள ஒடிசாவில் இருந்து 730 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மே 3ம் தேதி ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்கும் என்றும் இதனால், மணிக்கு 205 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர் மேன் தனது முகநூர் பக்கத்தில் ஃபானி புயல் மூலம் ஏற்படும் வானிலை மாற்றம் குறித்து பதிவிட்டுள்ளார்.
வெதர் மேன் பதிவில் இருந்து,
ஃபானி புயலானது இந்த வார இறுதியில் (மே 03) வட கிழக்கு பகுதியில் கரையை கடக்கும். ஆகையால் வட தமிழக மாவட்டங்களான சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிதமான வானிலையே நிலவும். வெயிலுக்கான வாய்ப்பு மிகவும் குறவு என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் தெற்கு மற்றும் தென்கிழக்கே 510 கிமீ தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளதால் ராயலசீமா முதல் வட மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களான நீலகிரி, தர்மபுரி, கிரிஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!