Tamilnadu

எடப்பாடியின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் - மனோஜ் பேட்டி

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை  வழக்கு  விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட  அனைவரும் ஆஜராயினர்.

வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையார் மனோஜ், 'கொடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எடப்பாடி ஆட்களான இரு மலையாளிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்' என்றார். இந்நிலையில் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என மனோஜ் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.