Tamilnadu
பாடிய நல்லூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் !
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ளது பாடியநல்லூர்.இந்த பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கச்சாவடியில் அப்பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரிடமும் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட்டில் பணிபுரியும் வடமாநில உழியர்கள், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!