Tamilnadu
மதுரை மத்திய சிறையில் மோதல் : போலீசார் குவிப்பு !
மதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் கைதிகள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது. மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் குவிப்பு. மதுரை மத்திய சிறைக்கு செல்லும் சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு அதிகரித்துள்ளனர். கைதிகள் கற்களைக் கொண்டு வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீசை எதிர்த்து கைதிகள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். கைதிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!