Tamilnadu
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குச் சென்ற பெண் அதிகாரி - மதுரையில் பரபரப்பு!
மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு சென்றதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என்பதால், சு.வெங்கடேசன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தத் தகவலறிந்து அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.
இதையடுத்து மதுரை மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பெண் அதிகாரி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்கு எதிரேயுள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றதாக, சி.சி.டி.வி காட்சிப் பதிவுகள் காட்டப்பட்டதையடுத்து, உரிய விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரிய வேட்பாளர்கள் கலைந்து சென்றனர்.
Also Read
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!