Sports

“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதேபோல், 3 ஒருநாள் போட்டிகளில் 2 ஒருநாள் போட்டியை வென்று ஏற்கனவே தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செயத ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 219 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 102 ரன்கள் குவித்து போராடினார். இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் அதிரடியான மற்றும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 69 பந்துகளில் 79 ரன்கள் (9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள்) விளாசி ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் (14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள்) குவித்தார்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ரோகித் சர்மா ஒருபுறம் பவுண்டரிகளாய் விளாச, மறுபுறம் ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Also Read: “கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”