Sports

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி… RCB அணியுடன் தோனி விளையாட மாட்டார்.. என்ன காரணம்? - முழு விவரம் உள்ளே!

2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே தோனியும் சிஎஸ்கே-வும் தான் பிரிக்க முடியாத பந்தம். ஆனால், 19 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மகேந்திர சிங் தோனி, 2026 ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம்.

45 வயதாகும் எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 278 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் தோனியிடம் தான் உள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே தோனி தனது உடல்நலன் குறித்தும், தனது பிட்னஸ் குறித்தும் பொதுவெளியில் அடிக்கடி பேசியுள்ளார். “எனக்கும் வயதாகிக் கொண்டே செல்கிறது. என்னால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.”

இந்நிலையில்தான் சிஎஸ்கே அணியின் அதிர்ச்சிகர இந்த அறிவிப்பு வந்துள்ளது. தோனியின் உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிர்வாகம், ”கெண்டைக் காலில் ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் எனவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுதான் தோனிக்கு கடைசி தொடர் என ஏற்கனவே பேசப்பட்டு வரும் நிலையில், தோனியின் உடல்நலன் குறித்த இந்த அறிவிப்பு ரசிகர்களை மிகப்பெரிய வருத்தமடையச் செய்துள்ளது.

சென்னையில் நடக்கும் 7 ஹோம் ஆட்டங்களும் நடைபெற உள்ள நிலையில், வெளியூரில் அவே ஆட்டங்கள் 8 நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரம் தோனி விளையாட மாட்டார் என்பதால், அதன்படி எத்தனை போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகள்:

ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ்

ஏப்ரல் 14 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மே 2 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மே 10 - மாலை 3.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

மே 18 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மே 21 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள்:

மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுகாத்தி

ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு

ஏப்ரல் 18 - இரவு 7.30 மணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 23 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை

ஏப்ரல் 26 - மாலை 3.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்

மே 5 - இரவு 7.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி

மே 15 - இரவு 7.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ

இன்று (மார்ச் 28) தொடங்கும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணைப்படி, 2 வாரங்கள் என்பது மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை ஆகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள சிஎஸ்கே போட்டிகளின் அட்டவணைப்படி, ஏப்ரல் 10ம் தேதி வரை,

சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 30ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கவுகாத்தியில் நடைபெறும் ஆட்டத்திலும், ஏப்ரல் 3ம் தேதி பஞ்சாப் கிங்சுடன் நடைபெறும் ஆட்டத்தில் தோனி பங்கேற்க வாய்ப்பில்லை. அதே போல், ஏப்ரல் 5ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பெங்களூருவில் நடைபெறும் ஆட்டம் என 3 ஆட்டங்களில் தோனி விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஆர்சிபி அணியுடன் இந்த ஆண்டு ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில் அந்த ஆட்டத்தில் தோனி பங்கேற்க வாய்ப்பில்லை.

சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணிக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.எஸ்.தோனி விளையாடதது ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

Also Read: இன்று முதல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.. 10 அணிகள், 70 லீக் போட்டிகள்… யாருக்கு கோப்பை? - முழு விவரம்!