Sports
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தோனி ஐபிஎல் போட்டிகளில் வருடத்திற்கு ஒருமுறை விளையாடினாலும், அவரது ரசிகர்கள் பட்டாளம் குறையவில்லை. இன்றளவும் கிரிக்கெட் உலகில் அவர் தனிக்காட்டு ராஜா தான். தோனி என்றால் எப்படி ஹெலிகாப்டர் சிக்சர் நியாபகம் வருமோ, அதுபோலதான் அவருடைய ஜெர்சி எண் 7ம் நம்பர்.
இந்நிலையில், தோனி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள ஒரு பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வாழ்க்கையில் சில எண்கள் நம்மோடு இரண்டறக் கலந்தவை. எனக்கும் 7 அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்று முதல் நான் 8-ம் நம்பருக்கு மாறுகிறேன். இதற்கான காரணம் விரைவில் உங்களுக்குத் தெரியும்” எனப் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக கிரிக்கெட் நட்சத்திரங்கள் இது போன்ற ‘சஸ்பென்ஸ்’ அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளனர். ஒருவேளை ஏதேனும் ஒரு புதிய பிராண்ட் விளம்பரத்திற்காக தோனி இப்படிச் செய்திருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஏனென்றால் கடந்த 2022ம் ஆண்டு இதே போன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என பதிவிட்டிருந்தார். அப்போது, தோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். தோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது.
மேலும், அப்போது நடைபெற இருந்த ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர். ஆனால், அவர் ஒரு விளம்பரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போதும், ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரது பொறுப்பு அல்லது ஜெர்சி எண்ணில் ஏதேனும் மாற்றம் இருக்குமா எனப் பல ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஏனென்றால் 8ம் நம்பர் அண்மையில் ராஜஸ்தான் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்ட ஜடேஜாவினுடைய ஜெர்சி எண். இதனால்தான் இது மேலும் விவாதத்தை கூட்டியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஏற்கனவே தோனியின் ‘7’ எண் ஜெர்சியை கௌரவப்படுத்தும் விதமாக ஓய்வு பெறச் செய்துவிட்டது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணை விடுத்து, ‘8’ என்ற எண்ணைத் தோனி கையில் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அவர் என்ன அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!
-
சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்