Sports
CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !
சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் தோனி தலைமை தாங்கி நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வந்தார்.
அதோடு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வென்றுகொடுத்தார். இதன் காரணமாக அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும் சென்னை அணி இந்த தொடரில் பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ருதுராஜ் சென்னை அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே சென்னை அணி ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பி, அந்த அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் CSKவுக்கு கொண்டு வந்தது.
இதனால் சஞ்சு சாம்சன்தான் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்படுவார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அடுத்த ஆண்டும் CSK அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என CSK அணி அதிகாரபூர்வமாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Also Read
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?
-
“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!