Sports
INDvsENG : 15 முறையாக தோல்வியடைந்து மோசமான சாதனையை படைத்த இந்தியா... பரிதாப நிலையில் கில் !
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியிலும் இந்திய அணி டாஸை இழந்துள்ளது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த தொடரின் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி டாஸை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து டெஸ்டில்தான் முதல் முறையாக சுப்மன் கில் கேப்டனாக தேர்வான நிலையில், அவர் 5 போட்டிகளிலும் டாஸில் தோல்வியையே கண்டுள்ளார்.
இது மட்டுமின்றி இந்திய அணிக்கு தொடர்ந்து 15 முறை டாஸை இழந்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான 4 ஆவது டி20 போட்டியில் இருந்து, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், தற்போது இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடர் என தொடர்ந்து 15 போட்டிகளில் இந்திய அணி டாஸை இழந்துள்ளது.
மூலம் ஒரு அணி அதிக முறை தொடர்ந்து டாஸை இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது. கணித சாத்தியகூறு படி 32 ஆயிரத்து 768 முறைகளில் ஒரு முறை மட்டுமே இப்படி நடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு நிகழ்வு ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மின்னல் மூலம் தாக்கப்படும் வாய்ப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!