Sports
சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் தொடர்... வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு !
நடப்பாண்டு அக்டோபர் மாதம் மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறும் என மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடைசியாக 2022 ம் ஆண்டு சென்னையில் WTA மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2023, 2024-ம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் போட்டி அட்டவணையில், சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இடம்பெறாமல் இருந்தது. எனவே மீண்டும் சென்னையில் போட்டிகள் நடைபெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்து அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
32 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் ஒற்றையர் பிரிவு, 16 அணிகள் பங்கேற்கும் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடர் மீண்டும் நடத்தப்படவிருப்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!