Sports

இந்தியாவில் நடக்கும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க BCCI முடிவு... பாகிஸ்தான் காரணமா ?

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அதில் கலந்துகொள்ள இந்திய அணி மறுத்த நிலையில், இந்தியா ஆடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்று கேள்வி எழுந்த நிலையில், இந்த போட்டியில் இந்தியா கலந்துகொள்ளாது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி இருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடரை புறக்கணிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தொடர் வேறு நாட்டில் நடத்தப்படலாம் என்றும், அல்லது தொடர் முற்றிலுமாக ரத்து செய்யப்படாமல் என்றும் கூறப்படுகிறது.

Also Read: முதல் இந்தியர் : 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா... பறிபோன தங்கப்பதக்கம் !