Sports
முதல் இந்தியர் : 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா... பறிபோன தங்கப்பதக்கம் !
ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
அதன்பின்னர் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். எனினும் அவர் இதுவரை 50 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறியாதது ஒரு குறையாக இருந்தது.
இந்த நிலையில், தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 90 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த மூன்றாவது ஆசியர் மற்றும் உலகளவில் 25வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
எனினும் இந்த தொடரில் ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 90 மீட்டர் தூரம் எரிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!