Sports
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வா ? - அவரே கூறிய பதில் என்ன தெரியுமா ?
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட கரணங்கள் காரணமாக பங்கேற்கவில்லை.
இதனால் அந்த போட்டியில் இந்திய அணியை பும்ரா வழிநடத்திய நிலையில், இந்திய அணி அந்த போட்டியில் அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய நிலையில், அவர் கேப்டனாக பொறுப்பேற்றார்.
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதோடு அதற்கு அடுத்த போட்டியில் மழை காரணமாக தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது. ஆனால், அடுத்து போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததோடு, ரோஹித் சர்மாவும் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இதன் காரணமாக சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார்.அதாவது போட்டியின் இடைவெளியில் போது பேட்டி அளித்த ரோஹித் ஷர்மாவிடம் ஓய்வு குறித்தான கேள்வி எழுப்ப பட்டது.இதற்கு பதில் அளித்த அவர் அணியின் நலனுக்காக எதை செய்யனுமோ அதை தான் நான் செய்து வருவதாகவும் என்னுடைய ஓய்வு குறித்து வெளியில் உள்ளவர்கள் முடிவு செய்ய முடியாது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Also Read
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!