Sports
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : அஸ்வினின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான அஸ்வின் இந்திய அணியில் தொடர்ந்து நீடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து திகழும் அஸ்வின் 500-க்கும் அதிக விக்கெட்டுகளை வீழத்தி அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வாங்கியர்கள் பட்டியலில் ஜாம்பவான் வீரர் முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் அஸ்வினின் செயல்பாடு சிறப்பாக இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளும், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
Also Read
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !