Sports
இந்தியா பாகிஸ்தான் வராவிட்டால் எங்களுக்கு இந்த சலுகை வேண்டும் - ஐசிசியிடம் பாகிஸ்தான் வாரியம் கோரிக்கை !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஐசிசிக்கு பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அதே நேரம் இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஐசிசி முயற்சி மூலம் இதற்கு விரைவில் தீர்வு ஏற்படும் வகையில் பாகிஸ்தான் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்தியா வராமல், இந்தியா ஆடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெற்றால், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களிலும் பாகிஸ்தான் கலந்துகொள்ளாது என்றும், அதற்கு பதிலாக பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கலந்துகொள்ளாததால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு பதிலாக ஐசிசியின் வருடாந்தர நிதிஒதுக்கீட்டில் பாகிஸ்தானுக்கு கூடுதல் பங்கு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!