Sports
"HE's a joke" - பும்ரா குறித்து கருத்தால் சர்ச்சையில் இங்கிலாந்து வீரர் ? - புகழ்ந்தாரா ? இகழ்ந்தாரா ?
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு திரும்பி ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையை வெல்ல பும்ரா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையையும் பும்ரா படைத்தார்.
இந்த நிலையில், பும்ரா குறித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் பின்னின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் குறித்துப் பேசியபோது பும்ரா குறித்து கூறிய ஸ்டீபன் பின், ”He is just—he's a joke, honestly” என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தொடர்ந்து பேசிய அவர், ”பந்துவீசுவதை நீங்கள் பார்க்கும்போதும், நல்லவேளை அவருக்கு எதிராக நாம் பேட் கட்ட வேண்டியதில்லை என நீங்கள் நினைப்பீர்கள்” என்று கூறியுள்ள நிலையில், பும்ராவை புகழவே அப்படி அவர் சொன்னார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!