Sports
சிக்ஸர் மழை பொழிந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி : தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்று அசத்தல் !
தென் ஆப்ரிக்காவுட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றபெற்றது.
அதன் பின்னர் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், தொடரின் வெற்றியாளர் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்காக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்கி நிலையில், இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இணைந்து சிக்ஸர் மழையை பொழிந்தனர்.
இறுதிவரை இந்த ஜோடியை தென்னாப்பிரிக்க அணியால் பிரிக்க முடியாத நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது.திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 120 ரன்களும், சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்ட்ரிகளுடன் 109 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைது செய்தது. இந்த தொடரில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!