Sports
"பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் அற்புதமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள்" - முன்னாள் வீரர் நம்பிக்கை !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இந்தியாவின் எல்லை பகுதியில் உள்ள லாகூரில் விளையாடிவிட்டு, அன்றைய தினமே விமானம் மூலம் அருகில் உள்ள இந்திய நகரங்களுக்கு இந்திய அணி செல்லலாம் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த யோசனை சிறப்பானது என்றும், பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் அற்புதமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், " லாகூரில் இந்தியா கிரிக்கெட் ஆடுவது என்பது சிறப்பாக யோசனை. இதனால் அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு செல்ல முடியும். பாகிஸ்தானின் வாரியத்தின் இந்த யோசனை சிறப்பானது. பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் அற்புதமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள்
விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு அமோக ஆதரவு கிடைக்கும். இதனைக் கண்டு இளம் இந்திய அணி மகிழ்ச்சியாக உணரும்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!