Sports
"உலகமே தற்போது பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது" - பாக்.முன்னாள் வீரர் காட்டம் !
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முல்தான் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 குவித்து டிக்ளர் செய்தது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்தே திணறியது.இறுதியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.டெஸ்ட் வரலாற்றில் இதுவரை முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் அடித்த அணி தோல்வியைத் தழுவியதே இல்லை.
ஆனால் அந்த மோசமான வரலாற்றுக்கு பாகிஸ்தான் அணி சொந்தமாகிவுள்ளது. அதோடு சொந்த மண்ணில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதோடு சொந்த மண்ணில் 11 போட்டிகளாக வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான சாதனையையும் பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
இந்த நிலையில், உலகமே தற்போது பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது என அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த விதம் கண்டு உலகமே வியப்படைகிறது. இந்த தோல்வியை யாருமே அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். பாகிஸ்தான் அணி வர வர உள்ளூர் அணியாக மாறி உள்ளது. ஒரு கிளப் டீம் கூட இந்த முறையில் விளையாடாது.
உலகமே தற்போது பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது. பாகிஸ்தான் அணி தற்போது சுயநல அணுகு முறையைக் கொண்டு இருக்கிறது. நம் நாட்டில் வீரர்கள் தற்போது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார்கள். அணி மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒற்றுமை இல்லை.இதற்கு யார் காரணம் என்பது குறித்து கேப்டனிடம் விசாரிக்க வேண்டும். இது பற்றி விசாரித்து அதற்கு பொறுப்பான நபரை நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!