Sports
இது நடந்தால் அப்போதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் - 37 வயதாகும் அஸ்வின் கூறியது என்ன ?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டார் அஸ்வின்.
எனினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை வெளிப்படுத்தி கடந்த உலகக்கோப்பை டி20 தொடர், மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார்.
எனினும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது 37 வயதாகும் அஸ்வின் தான் தற்போது ஓய்வு பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்துப் யூடியூப் சேனலில் பேசிய அவர், “தற்போது நான் ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் இன்றைய நாள் குறித்து மட்டுமே யோசிக்கிறேன். எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதே கிடையாது. ஆனால் ஏதாவது ஒருநாளில், இது போதும் என்று தோன்றும்போது உடனடியாக கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவேன்.
அனில் கும்ப்ளே என்னிடம் நேரடியாகவே, அவரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் எனக்கென்று எந்த இலக்கையும் வைத்துக்கொண்டதில்லை. அனில் கும்ப்ளே மிகச்சிறந்த மனிதர். நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான காதல் எனக்கு இன்னும் குறையவில்லை. அது குறையும் போது ஓய்வு பெற்று விடுவேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!