Sports
“பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டால் அவர்களை மீண்டும் வீழ்த்துவோம்” - அமெரிக்க வீரர் நம்பிக்கை !
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த தொடரின் லீக் போட்டியில் வலிமையான பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது.
இத்தனைக்கும், அமெரிக்க அணி இந்த தொடரை நடத்தியன் காரணமாகவே உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பையே பெற்றது. அப்படிப்பட்ட அணியிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது அந்த அணிக்கு ஏற்பட்ட சரிவாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தால் அந்த அணியை வீழ்த்துவோம் என அமெரிக்க வீரர் அலி கான் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது மிகப்பெரிய ஒரு தருணம்.
ஆனால் இது ஏதோ அதிஷ்டத்தில் நடந்தது அல்ல. பாகிஸ்தானை பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் பிட்னஸ் என நான்கு துறைகளிலும் வீழ்த்தும் திறன் எங்களுக்கு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவர்களை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன். எங்களுக்கு எதிராக ஆடினால் அழுத்தம் அவர்களுக்குத்தான். நாங்கள் அழுத்தமின்றி விளையாடுவோம். இந்த போட்டியை மற்றொரு போட்டியாகவே கருதுவோம்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!