Sports
”எனது போராட்ட குணம் எப்போதும் மாறாது” : தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் ஓபன் டாக்!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என சர்வதேச தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வினேஷ் போக்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடைசிவரை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இரவு முழுவதும் எங்கள் போராட்டம் இருந்தது. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது. எனது குழுவுக்கும், சக வீரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் சொல்வது, எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ அது நிறைவேறாமல் இருப்பதாக உணர்கிறேன்.
என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருந்தால் 2032 வரை நான்விளையாடி இருப்பேன். எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால் நான் எப்போதும் சரியான விஷயங்களுக்காக துணிச்சலுடன் போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!