Sports
பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியாவுக்கு 4-வது பதக்கம் உறுதியானது.. மல்யுத்தத்தில் வரலாறு படைத்தார் வினேஷ் போகத்!
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர். அதே போல 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷ்ன்ஸ் பிரிவில் இறுதிபோட்டியில், ஸ்வப்னிஸ் குசலே 451.4 புள்ளிகளை எடுத்து 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், தற்போது ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் அதுவும் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது. ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ மகளிர் எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வினேஷ் போகத் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார். இதில் முதலில் பின்னடைவில் இருந்த அவர் கடைசி 20 நொடிகளில் அபாரமாக செயல்பட்டு இதுவரை எந்த போட்டியிலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த யூ சுசாகியை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!