Sports
"இந்தியாவுக்கு தைரியம் இருந்தால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடட்டும்" - பாக். முன்னாள் வீரர் சவால் !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ சார்பில் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு தைரியம் இருந்தால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடட்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோஹைல் தன்வீர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " நாங்கள் தைரியமான சிங்கங்கள் என்பதால் இந்தியாவுக்கு வந்து அவர்களுடன் விளையாடினோம். இந்தியாவுக்கு தைரியம் இருந்தால் எங்களை போல எங்கள் நாட்டுக்கு வந்து விளையாடட்டும்.
இந்தியாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்குகிறோம். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடி இருக்கிறோம். அதே போல இந்தியாவும் ஒருமுறை பாகிஸ்தான் வந்து விளையாடி பார்க்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!