Sports
EURO 2024 : போராடி வென்ற ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி... அசத்திய இளம்வீரர்கள் !
கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.
மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கால்பந்து தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தன. நேற்று நடைபெற்ற போட்டியில் துருக்கி அணி ஜார்ஜியா அணியை சந்தித்தது. இதில் ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் துருக்கி கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆட்டத்தின் 32வது நிமிடம் ஜார்ஜியா பதில் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமன் ஆனது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி 65வது நிமிடத்தில் துருக்கியின் இளம் வீரர் குலெர் ஒரு கோல் அடிக்க துருக்கி 2-1 என முன்னிலை பெற்றது. பின்னர் ஆட்டத்தின் முடிவில் 90+7 வது நிமிடத்தில் துருக்கி மற்றொரு கோல் அடிக்க துரோகி அணி 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் போட்டியில் போர்த்துக்கல் அணி செக் குடியரசு அணியை சந்தித்தது. இதில் செக்குடியரசு 62-வது நிமிடத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் செக்குடியரசு அணி வீரர் சுயகோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.
இறுதி நேரத்தில் அதாவது ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி மற்றொரு கோல் அடிக்க அதுவே இறுதியில் வெற்றிக்கான கோலாகவும் மாறியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் போர்த்துக்கல் அணி செக் குடியரசு அணியை வீழ்த்தியது.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!