Sports
நார்வே செஸ் தொடர் : உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா!
நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா ராஜாவிற்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார்.
அதேபோல் கார்ல்சன் சற்று வித்தியாசமாக ராணிக்கு அருகில் இள்ள மந்திரிக்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 37 வது நகர்த்தலில் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். மேலும் ரேபிட் போட்டிகளில் கார்ல்சனை வீழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா முதல் முறையாக கிளாசிக் போட்டியில் வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் மூன்று சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகள் முதல் இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். இந்த தோல்வியின் மூலம் கார்ல்சன் ஐந்தாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !