Sports
"ரோஹித் சர்மா கூறியது எனக்கு ஆறுதல் அளித்தது"- இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து ரிங்கு சிங் கருத்து !
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த போட்டியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இதனால் அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் தேர்வாகாதது முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது என ரிங்கு சிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் தேர்வாகாதது முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், இந்திய அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஒருவர் கைகளில் இல்லை என்பது எனக்கு புரிந்தது.
அதில் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதும், அனைவரும் தீவிர யோசனைக்குப் பிறகே ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரிந்தது. அவர்களின் முடிவு சரியாகத்தான் இருக்கும். அதனால், அது பற்றி நான் கவலைப்படவில்லை. எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று விட்டுவிட்டேன். என்னும், இந்த உலகக் கோப்பை தொடரில் தேர்வாகவில்லை என்றாலும் அடுத்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புகள் வரும் என்று ரோஹித் சர்மா என்னிடம் கூறியது ஆறுதல் அளித்தது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!