Sports
“என்னுடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை” - தங்கப்பதக்கம் வென்றும் நீரஜ் சோப்ரா விரக்தி !
ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர் என செல்லும் அனைத்து இடங்களிலும் தொடர் சாதனைப் படைத்திருந்தார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 82.27 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தஙகபதக்கத்தை கைப்பற்றினார். இந்த நிலையில், என்னுடைய இந்த செயல்பாடு தமக்கு திருப்தி அளிக்கவில்லை என நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ” என்னுடைய இந்த செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே அதனை பற்றி பேச வேண்டாம். இது என்னுடைய சிறந்த செயல்பாடு அருகே கூட இல்லை. இந்தத் தொடரில் பங்கேற்கும் போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் சரியான நிலையில் இல்லை.
ஏனது செயல்பாடை முன் வைத்து தான் எந்த போட்டியில் விளையாடலாம்? எந்த போட்டியில் இருந்து விலகலாம்? என்பது குறித்து முடிவெடுப்பேன். ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே தமது நோக்கம். எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!